மாதிரிப் புகைப்படம்.
Tamilnadu

‘சென்னையில் பிரபல வணிக வளாகத்தில் பயங்கரம்’- விஷவாயு தாக்கி ஊழியர் பலி!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் துப்புரவு பணிகளை அருண்குமார் என்பவர் செய்துவந்தார். இந்நிலையில் வழக்கம் போல பணிக்குச் சென்ற அருண் குமாரை நிர்வாகம் அங்குள்ள கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய அனுப்பி வைத்துள்ளது.

எந்த விதபாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் அருண்குமார் கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். பலநாட்கள் முறையாக பராமரிக்காமல் இருந்ததனால் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு வெளியேறியுள்ளது. அந்த வாயு தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அருண் குமார் மயக்கம் அடைந்துள்ளனர்.

பின்னர், சம்பவம் இடத்திற்கு வந்த சகஊழியர்கள் அருண்குமார் மயக்கம் அடைந்திருந்திருப்பதைக்கண்டு அதிர்ந்து போய், ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அருண்குமாரை பரிசோதித்த மருத்தவர்கள் அவர் உயிரிழந்ததாகக் கூறியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அருண் குமாரின் மனைவி சுகன்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

துப்புரவு பணியாளா்கள் பணியில் ஈடுபடும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்று நீதிமன்றமும், சமூக ஆா்வலா்களும் எச்சரித்து வந்தாலும். பெரும்பாலான பகுதிகளில் துப்புரவு பணியாளா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றியே பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பெரிய நிறுவனங்கள் இதைக்கண்டுக்கொள்வது இல்லை.

அப்படி எந்தவித பாதுகாப்பும் இன்றி, பணியில் ஈடுபடும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் நடந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க அரசு முயற்சி எடுக்கவேண்டும். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோருகின்றனர்.