Tamilnadu
“அ.தி.மு.க ஆட்சியில் குடிமராமத்து பணியில் ஊழல் முறைகேடுகள்” - சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
கடந்த 3 ஆண்டுகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நீர்வரத்துத் தடங்ளைத் தூர்வாருவதற்காக தமிழக அரசு 928.64 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதற்காக சங்கங்கள் அமைக்கப்பட்டு நிதி அவற்றின் மூலம் பிரித்து வழங்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளாக சங்கங்கள் செயலிழந்துவிட்டதால் குடிமராமத்து பணிகள் நடைபெறாமல் பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்வரத்துத் தடங்ளைத் தூர்வாருவதற்காக குடிமராமத்துத் திட்டங்கள் தொடங்கப்பட்டது. தமிழக அரசின் குடிமராமத்துத் திட்டத்தின் படி, நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பெருக்கவும், நீர்ப்பாசன வழித்தடங்களைப் புனரமைக்கவும், செயல்படுத்தப்படும். இந்தக் குடிமராமத்துப் பணிகள் நீர்வள ஆதாரத் துறையினரால் திட்டமிடப்பட்டு விவசாய சங்கங்கள், ஆயக்கட்டுதாரர்கள், பயன்பாட்டாளர் சங்கங்கள் மூலமாக செயல்படுத்த வழிகாட்டு நெறிகள் வகுக்கப்பட்டு இருக்கின்றன.
இதுதொடர்பாக விவசாய சங்கப் பிரதிநிதிகளை அழைத்து, சங்கங்களை ஏற்படுத்தி குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான விதிமுறைகள் மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக வகுக்கப்பட்டு, முறையாகப் பணிகள் நடைபெற வேண்டும் எனவும் அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஆனால், இந்த விதிமுறைகளை எல்லாம் வீசி எறிந்துவிட்டு, ஆளும் கட்சியினர் தலையீட்டில் பல போலி சங்கங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றின் மூலம் குடிமராமத்துத் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, விவசாய சங்கப் பிரதிநிதி சங்கங்ளைச் சேர்ந்த 7 பேரும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களின் பினாமி என்று கூறப்படுகிறது. குடிமராமரத்து பணிக்காக 2016 - 2017-ம் ஆண்டு 100 கோடி ரூபாயும், 2017 - 2018-ம் ஆண்டில் 328.95 கோடி ரூபாயும், 2018 - 2019 -ம் ஆண்டில் 499.69 கோடி ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.
இந்த தொகையை முழுமையான தேவைக்காக அரசு சார்பில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, நிதி ஒதுக்கீட்டைத் தவிர, வணிக நோக்கங்களுக்காக உள்ள குவாரி மற்றும் போக்குவரத்துக்கு உதவும் தொகையை பொதுப்பணித்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், குடிமராமரத்து பணிக்காக அமைக்கப்பட்ட விவசாய சங்கம் விவசாயிகளின் அனுமதியின்றி அமைக்கப்பட்டதாக தூத்துக்குடியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.எஸ்.ஏ. காந்திமதிநாதன் கூறினார்.
பின்னர் இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகாரும் அளித்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. மேலும், இதுதொடர்பான வழக்கில், மாநில தலைமைச் செயலாளர், அக்டோபர் இறுதிக்குள் சங்க தேர்தல் நடப்படும் என்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சங்கங்களுக்கான அலுவலர்கள், உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!