Tamilnadu
செஞ்சியில் தீண்டாமைக் கொடுமை : தலித் மக்களுக்கு பொருட்கள் வழங்ககூடாது என ஆதிக்க சாதியினர் தீர்மானம்!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அருகே எதாநெமிலி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தலித் மக்கள் வைத்திருந்த பேனரை கிழித்தது தொடர்பாக இருபிரிவினரிடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.
இந்நிலையில் இந்த மோதல்போக்கு கடந்த 27-ம் தேதி திபாவளியன்று முற்றி மீண்டும் பிரச்சனைக்கு வழிவகுத்தது. இதனையடுத்து இருபிரிவினரையும் செஞ்சி வட்டாச்சியர் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
ஆனாலும், விரோதத்தை முறித்துக்கொள்ளத ஒருபிரிவினர், பட்டியலின மக்கள் பகுதியில் உள்ள மளிகைக் கடைகளிலிருந்து எந்த பொருட்களும் வாங்கக் கூடாது என்றும் அதேப்போல் அப்பகுதி மக்களுக்கு எந்த பொருளும் வழங்கக்கூடாது, டீ கடைகளில் டீ கொடுக்கக்கூடாது எனவும் கூறியுள்ளனர்.
மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தலித்கள் கொண்டு வரும் பாலை அங்காடியில் வாங்கவோ, விற்கவோ கூடாது என சாதி ரீதியிலான கட்டுப்பாடுகளை விதித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் செஞ்சியில் இப்படி சாதிய கட்டுப்பாடுகளை விதித்தவர்களுக்கு கண்டனம் குவிந்து வருகின்றனது.
இந்நிலையில், இதுபோல சாதி மோதல்களையும், பிரிவினையை ஏற்படுத்தும் சம்பந்தபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் செஞ்சி வட்டாச்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புகார் மனுக் கொடுக்கப்பட்டுள்ளது.
புகாரைப் பெற்றுக்கொண்டப் போலிஸார், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும், சாதி கட்டுப்பாடு விதிப்பவர்களை எச்சரித்தும் வருவதாகக் கூறப்படுகிறது.
நவீன வளர்ச்சிக்காலத்தில் ஒருகுறிப்பிட்ட மக்கள் மீது ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவது வேதனை அளிப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!