Tamilnadu
“லலிதா ஜுவல்லரியைத் தொடர்ந்து, பெல் கூட்டுறவு வங்கியில் கைவரிசை”: ரூ1.43 கோடி கொள்ளை - அச்சத்தில் மக்கள்!
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய அரசின் பெல் தொழிற்சாலை வளாகத்தின் நுழைவு வாயில் வெளியே பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் மூலம் தான் பெல் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.
இந்நிலையில், வெள்ளிகிழமையன்று வங்கியில் வைக்கப்பட்டிருந்த 1.43 கோடி ரூபாய் பணம் கொள்ளை போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வங்கிக்கு அருகில் இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில், பெல் ஊழியர்கள் தவிர வெளிநபர்களும் இருசக்கர வாகனத்தை நிறுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், அந்த பகுதியைத் தாண்டி வங்கி மற்றும் ஆலைக்குள் பெல் தொழிலாளர்கள் மட்டுமே செல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு கட்டுப்பாடுகள் உள்ளநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மர்மநபர்கள் இருசக்கர வாகனம் நிறுத்தில் இருந்து வங்கி சுவரில் இருந்த ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, வங்கியில் வைக்கப் பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்தாகக் கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து வங்கி அதிகாரிகள் திருச்சி எஸ்.பி., ஜியாவுல்ஹக் மற்றும் திருவெறும்பூர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் வங்கிக்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்டமாக வங்கியின் காசாளர் லெட்சுமியிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது, சம்பளம் போடுவதற்காக வியாழனன்று பைகளில் 1.50 கோடி ரூபாய் ரொக்கம் கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் 7 லட்சம் ரூபாய் வினியோகம் செய்தது போக, மீதம் 1.43 கோடி ரூபாய் பணத்தை பைகளில் வைத்துவிட்டுதாகவும் கூறியுள்ளார்.
மேலும், அன்றைய தினம் வங்கி லாக்கர் சாவி வேலை செய்யாததால் பணத்தை அறையிலேயே வைத்துவிட்டுச் சென்றதாகவும் லெட்சுமி கூறியுள்ளார். பின்னர் காலை வழக்கம் போல் வங்கிக்கு வந்து பார்க்கும் போது அந்த பணம் பை அங்கு இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வங்கி மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். அதில் ரெயின் கோர்ட், முகமூடி அணிந்த ஒரு நபர் ஜன்னல் வழியாக வங்கிக்குள் புகுந்து நடமாடுவதும், அந்த நபர்தான் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
அந்த நபர் யார்? வங்கிக்குள் புகுந்த கொள்ளையனுக்கு உதவியாக வெளியில் யாராவது இருந்தார்களா?, அறையில் பணம் இருப்பது எப்படி தெரியும் என்பன குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியில் சமீபத்தில் பிரபல நகைக் கடை, பஞ்சாப் நேஷனல்வங்கி என தொடர் கொள்ளை சம்பவங்கள் நடந்த நிலையில் தற்போது கூட்டுறவு வங்கியில் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. இதுபோல தொடர் கொள்ளைச் சம்பவத்தால் அப்பகுதி பொது மக்கள் மிகுந்த அதிர்த்தில் உள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!