Tamilnadu

மணப்பாறையில் மழைக்கு வாய்ப்பு? சுர்ஜித்தை மீட்கும் பணி என்னவாகும்? - வானிலை மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது நாளை குமரிக்கடல் பகுதியில் நகர்ந்து வலுப்பெறும். ஆகையால் அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு பகுதியிலும், வட தமிழகத்தில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் அக்.,30, 31ம் தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.

இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு கேரளா, தென் தமிழக கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் வருகிற 29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திருச்சி மணப்பாறையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையே பெய்யக்கூடும் என ஆழ்துளை கிணற்றில் விழுந்துள்ள சுர்ஜித்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.