Tamilnadu
தடைபட்ட மீட்பு போராட்டம் “இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
திருச்சி மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2வயது சிறுவன் சுர்ஜித்தை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்பதற்கான பணி 68 மணிநேரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
25ம் தேதி முதற்கொண்டு அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிட்டு வருகின்றனர். நேற்று இரவு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சென்று மீட்பு பணி நடைபெறுவது குறித்து கேட்டறிந்தார்.
ஆழ்துளையில் சிக்கியுள்ள சிறுவனை மீட்பதற்காக அதன் அருகிலேயே மற்றொரு ஆழ்துளை அமைக்கும் பணி நேற்று காலை 7.10 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதிதாக தோண்டப்படும் குழியில் கடினமான பாறைகள் உள்ளதால் ஓ.என்.ஜி.சி-யின் ரிக் இயந்திரம் பழுதானது. 100 அடிக்கு கீழே குழி தோண்டப்பட்டால்தான் பக்கவாட்டில் வழி அமைத்து சிறுவனை மீட்டெடுக்க முடியும்.
இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”ரிக் இயந்திரம் செயல்படத் தொடங்கியதில் இருந்து இதுவரை 90 அடி வரை தொண்டியிருக்கக் கூடும். ஆனால் பாறைகள் கடினமாக இருப்பதால் மீட்பு பணியில் தாமதம் நீடித்து வருகிறது.
இதுபோன்ற கடினமான பாறைகளை கொண்ட நிலத்தை பார்த்ததில்லை. குழியில் விழுந்துள்ள குழந்தையை மீட்கும் பணி தொடர்பாக நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம். சிறுவனின் பெற்றோரிடமும் அவ்வப்போது நிலமை குறித்து எடுத்துரைத்து வருகிறோம்.
ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை சுர்ஜித் விழுந்து 4 நாட்கள் ஆகிவிட்டதால் மருத்துவர்களிடமும் ஆலோசனை நடத்தவுள்ளோம். மீட்பு பணி குறித்தும் இறுதிகட்ட முடிவை எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.” எனக் கூறியுள்ளார்.
ஏற்கெனவே சிறுவன் சுர்ஜித்தின் உடல்நிலை குறித்த அச்சங்கள் இருக்கும் நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு தெரிவித்திருப்பது மேலும் அதிர்ச்சியையும் வேதனையையும் கூட்டியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!