Tamilnadu
கடந்த 10 ஆண்டுகளில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தைகளும், மீட்கப்பட்ட விவரமும்!
திருச்சியில் நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கடந்த 25ம் தேதி ஆரோக்கியராஜ் மற்றும் கலாமேரியின் மகனான சிறுவன் சுர்ஜித் தவறுதலாக விழுந்தை அடுத்து, 65 மணிநேரத்தை கடந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மட்டும் ஆழ்துளை கிணறுகளில் சிக்கிய குழந்தைகளில் பலர் உயிருடன் மீட்கப்பட்டிருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு,
2009ம் ஆண்டு பிப்ரவரி 22ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவி மாயி 30 மணிநேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்டவர் உயிரிழந்தார்.
அதே ஆண்டு ஆக.,27ம் தேதி திருவண்ணாமலையில் உள்ள தண்டராம்பட்டு கிராமத்தில் 3வயது சிறுவன் கோபிநாத் என்பவர் உயிரிழந்தார்.
2011ம் ஆண்டு செப்டம்பர் 8ம் திருநெல்வேலி கைலாசநாதபுரத்தில் இருந்த 200 அடி ஆழத்தில் விழுந்த சிறுவன் சுதர்சன் உயிரிழந்தார்.
2012 அக்.,1ல் கிருஷ்ணகிரி தளியில் உள்ள 50 அடி ஆழத்தில் விழுந்த 3 வயது சிறுவன் குணா உயிருடன் மீட்கப்பட்டார்.
2013, ஏப்.,28ல் கரூரில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 7வயது சிறுமி முத்துலட்சுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அதே ஆண்டு செப்.,28ல் திருவண்ணாமலை புலவன்பாடியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தேவி என்ற 4வயது சிறுமி 10 மணிநேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2014 ஏப்.,5ல் விழுப்புரம் பல்லகசேரியில் மதுமிதா என்ற 3 வயது சிறுமியும் மீட்கப்பட்ட பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே மாதம் 14ம் தேதி நெல்லை குத்தாலப்பேரியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3வயது சிறுவன ஹர்ஷன் 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
மேலும், 15ம் தேதி திருவண்ணாமலை கிடாம்பாளையத்தில் 160 அடி ஆழத்தில் இருந்த ஆழ்துளை கிணற்றில் 45 அடியில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை சுஜித் 24 மணிநேர போராட்டத்துக்கு பிறகு சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.
அதனையடுத்து 2015 ஏப்.,13ம் தேதி வேலூர் கூராம்பாடியில் 350 அடி ஆழத்தில் விழுந்த இரண்டரை வயது சிறுவன் தமிழரசன் உயிருடன் மீட்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2018 செப்.,23 நாகை புதுப்பள்ளியில் 18 அடி ஆழத்தில் விழுந்த 2 வயது சிறுமி திவ்யதர்ஷனி உயிருடன் மீட்கப்பட்டார்.
இவ்வாறு இருக்கையில் கடந்த் 25ம் தேதி 600 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!