Tamilnadu
ஆழ்துளை குழாயில் சிறுவன் சுர்ஜித் விழுந்தது எப்படி ? சிறுவனின் தற்போதைய நிலை என்ன ?
திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வசித்து வரும் பிரிட்டோ - மேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித். நேற்று மாலை 5.40 மணி அளவில் தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் சுஜித், எதிர்பாராத விதமாக கைவிடப்பட்ட ஆழ்துளை குழாய் கிணற்றில் தவறி விழுந்தான்.
இந்தக் ஆழ்துளை கிணறு 7 வருடங்களுக்கு முன்பு பிரிட்டோ தனது வீட்டு குடிநீர் பயன்பாட்டுக்காகத் தோண்டப்பட்டதாகவும், அதில் நீர் இல்லாததால் 5 வருடங்களுக்கு முன்பு அதில் மேல்பகுதியை மட்டும் மண்ணைப் போட்டு நிரப்பி இருக்கிறார்.
அந்தப்பகுதியில் சோளம் விதைத்து விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்த மழையில் மண் இறங்கி துளை மீண்டும் திறந்துள்ளது. அந்த துளையில் குழந்தை சுஜித் விளையாடிக்கொண்டிருந்த போது, தவறி விழுந்துள்ளான்.
நள்ளிரவு 1 மணி
இரவு 1 மணி வரையும் மீட்புப் பணியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. குழந்தையின் கையில் சுருக்குப் போட்டு இழுக்கும் திட்டமும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, கோவையைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரது குழுவும் மீட்புப் பணியில் இணைந்தது. மூன்று குழுக்களும் சேர்ந்து தொடர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். குழந்தையின் மற்றொரு கையில் சுருக்குப் போட முயற்சித்த நடவடிக்கை, தொடர் மழைத்தூறலால் தடைப்பட்டது.
அதிகாலை 4 மணி
அதிகாலை 4.30 மணியளவில், மற்றொரு கையில் சுருக்குப் போட்டு மீட்கும்போது, ஏற்பட்ட கோளாறால், குழந்தை 26 அடியில் இருந்து 70 அடிக்கும் கீழாக சரிந்ததால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
காலை 7 மணி
தேசியப் பேரிடர் மீட்புக்குழு, மாநில பேரிடர் மீட்புக் குழு, நெய்வேலி சுரங்கப் பாதுகாப்புக் குழு ஆகிய குழுக்களுக்குத் தகவல் தரப்பட்டதும், அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 12 மணி நேரங்களுக்கும் மேலாக மீட்புப் பணி நடந்தாலும், எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் அப்பகுதி மக்கள் உட்பட அனைவரும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
காலை 10 மணி
70க்கும் மேற்பட்ட மீட்புப் படையினர் தீவிரமாகத் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 70 அடியில் இருக்கும் குழந்தையிடம் இருந்து எந்தவித அசைவும் இல்லாததால், அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டது.
மதியம் 1 மணி
தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினர் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தையை மீட்க முடிவு செய்துள்ளனர். அதுவும் பயன் தராவிட்டால், நிலத்தின் அருகே சுரங்கம் தோண்டி குழந்தையை மீட்க உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். 20 மணி நேரத்தைக் கடந்தும் மீட்புப் பணி நடந்து வருவதால், குழந்தையின் பெற்றோர் பதபதைப்பில் உள்ளனர்.
மதியம் 2 மணி
மீண்டும் குழந்தையின் மணிக்கட்டில் சுருக்குப் போட்டு வெளியே எடுக்க தேசியப் பேரிடர் மீட்புக் குழு திட்டமிட்டு, அதற்கான பணியினைத் துரிதப்படுத்தி உள்ளனர்.
மதியம் 3 மணி
குழந்தையின் கையில் கயிறு கட்டி மேலே இழுக்கும் முறை தோல்வி அடைந்தது. மேலும் அம்முயற்சியில் மண் சரிந்து குழந்தை மேலும் 10 அடி சரிந்து 80 அடிக்கு சென்றது. இதனால் மீட்பு பணியை மேலும் சிக்கலாக்கியுள்ளது.
மதியம் 4 மணி
ஹைட்ராலிக் கருவி மூலம் குழந்தையின் கையை பிடித்து மேலே எடுக்கும் முயற்சி மேற்கொள்ள சோதனைகள் நடந்து வருகிறது.
இரவு 9 மணி
27 மணி நேரத்தை தாண்டியுள்ள நிலையில், பக்கவாட்டில் சுரங்கம் தோண்ட முடிவு செய்யப்பட்டு மீட்புப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை குழந்தையை மேல்நோக்கி மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், சுரங்கம் தோண்டுவதன் மூலம் கீழ் பகுதியில் இருந்து குழந்தையை மீட்க புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
சிறுவன் மயக்க நிலையில் இருக்கிறான் - மாவட்ட ஆட்சியர்
சிறுவன் மயக்க நிலையில் இருப்பதாகவும், சுரங்கம் தோண்டும் பணி சீராக நடைபெற்று வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். இதுவரை 42 அடிகள் தோண்டப்பட்டு உள்ளதாகவும், இன்னும் 6 மணி நேரத்தில் மீட்புப் பணி நிறைவடையும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?