Tamilnadu
2020ல் இத்தனை நாள் அரசு விடுமுறையா? அதுவும் வேலை நாட்களில் - முழு விவரம்!
2020ம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் பட்டியலில் குறிப்பிட்டுள்ள நாட்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2020ம் ஆண்டில் ஜனவரி 1ம் தேதி முதல் டிசம்பர் 25ம் தேதி வரை தொடர்ந்து 23 நாட்கள் அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஜனவரியில் 5 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 5 நாட்களும், அக்டோபரில் 4 நாட்களும் அதிக விடுமுறை நாட்களை கொண்டுள்ளது. இதில், விடுமுறையே இல்லாத மாதம் பிப்ரவரி மட்டும்தான்.
இதுமட்டுமல்லாமல், பொது விடுமுறை வரும் பெரும்பாலான நாட்களும் வேலை நாட்களை கொண்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இதனால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஏனெனில், நடப்பு ஆண்டில் வந்த அரசு விடுமுறைகளில் தீபாவளி உட்பல பலவும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலேயே வந்துள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!