Tamilnadu

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : விக்கிரவாண்டியில் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு?

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.

இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சில இடங்களில், கொட்டும் மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்தனர்.

காலை 7 மணிக்கு துவங்கி அமைதியாக, வன்முறை ஏதும் இல்லாமல் நடைபெற்ற வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவடைந்தது. இறுதிக்கட்ட நிலவரப்படி, நாங்குநேரியில் 66.10 விழுக்காடு வாக்குகளும், விக்கரவாண்டியில், 84.36 விழுக்காடு வாக்குகளும், புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதியில் 69.44 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பதிவான வாக்குகள் வரும் 24ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.