Tamilnadu
#ByElection LIVEUPDATE | விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு!
வாக்குப்பதிவு சதவீதம்!
6 மணி நிலவரம் : விக்கிரவாண்டியில் 76% வாக்குப்பதிவு, நாங்குநேரியில் 62% வாக்குப்பதிவு!
முழுமையான விபரம் பின்னர் தெரியவரும்.
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு : வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தீவிரம்!
வாக்குப்பதிவு நிறைவு!
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிலவரம்!
பிற்பகல் 3 மணி வரை வாக்குப்பதிவு :
நாங்குநேரி : 52.18% வாக்குகள் பதிவு
விக்கிரவாண்டி : 65.79% வாக்குப்பதிவு
புதுச்சேரி : காமராஜ் நகர் - 56.16% வாக்குப்பதிவு
இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிலவரம்!
மதியம் 01 மணி வரை வாக்குப்பதிவு:
நாங்குநேரி - 41.35 சதவீதம் வாக்குகள் பதிவு
விக்கிரவாண்டி - 54.17 வாக்குப்பதிவு
புதுச்சேரி: காமராஜ் நகர் - 42.71% வாக்குப்பதிவு
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 32.54 சதவீதம் வாக்குகள் பதிவு!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 32.54 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பாதிப்பு!
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கனமழை பெய்துவருவதால் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் 10 மணி நிலவரப்படி 11.60% வாக்குகள் பதிவாகியுள்ளன.
சட்டப்பேரவை தேர்தல் : வாக்குப்பதிவு நிலவரம்!
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவுக் நடைபெற்றுவருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி ஹரியானாவில் 8.73%, மகாராஷ்டிராவில் 5.46% வாக்கு பதிவாகி உள்ளது
இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிலவரம்!
காலை 9 மணி வரை வாக்குப்பதிவு:
நாங்குநேரி - 18.04 சதவீதம் வாக்குகள் பதிவு
விக்கிரவாண்டி - 12.84 வாக்குப்பதிவு
புதுச்சேரி: காமராஜ் நகர் - 9.66% வாக்குப்பதிவு
நாங்குநேரி இடைத்தேர்தலில் 12.73 சதவீதம் வாக்குகள் பதிவு!
நாங்குநேரி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.73 சதவீதம் வாக்குகள் பதிவு
ஹரியானா, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
நாங்குநேரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு!
நாங்குநேரி தொகுதியில் உள்ள வடுகமச்சிமதில் கிராமத்தில் மீண்டும் 2-வது முறையாக வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு 1 மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒருவர் மட்டுமே வாக்களித்துள்ளதாக தகவல்!
இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!
தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனும், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியும், அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் போட்டியிடுகின்றனர்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!