Tamilnadu
நெருங்கும் தீபாவளி பண்டிகை... கிடுகிடுவென உயரும் மளிகைப் பொருட்களின் விலை - பொதுமக்கள் திண்டாட்டம்!
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
முதல் தர துவரம்பருப்பு கிலோ 92 ரூபாய்க்கு விற்கப்பட்டுவந்த நிலையில் 105 ரூபாய்க்கும், 90 ரூபாயாக இருந்த உளுந்து 120க்கும், மிளகாய் வத்தல் கிலோ 35 ரூபாய்க்கும், குண்டு மிளகாய் 10 ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்படுகிறது.
அதேபோல், முழு முந்திரி ரூ.800ல் இருந்து 870க்கும், அரை முந்திரி ரூ.630ல் இருந்து 690க்கும், உலர் திராட்சை 220ல் இருந்து 270 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தி மற்றும் வரத்து குறைவு காரணமாக பருப்பு வகைகள், பூண்டு, வெல்லம் போன்ற பல மளிகைப் பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இது போன்ற அத்திவாசிய சமையல் பொருட்களின் விலைவாசி உயர்ந்து வருவதால் 1 கிலோ வாங்கிவந்த நிலையில் அரை கிலோ வாங்கும் நிலை உருவாகியிருப்பதால் பண்டிகை காலத்தில் பலகாரங்கள் செய்து சுற்றத்தாருக்கு வழங்குவது இனி நடக்காதோ என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாமல் சில்லறை வியாபாரிகளும் இந்த விலை உயர்வால் வருமானம் ஈட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
ஏற்கெனவே பால் மற்றும் காய்கறிகளின் விலைவாசி உயர்ந்திருக்கும் நிலையில் தற்போது தீபாவளி சமயத்தில் மளிகைப் பொருட்களின் விலையும் அதிகரித்திருப்பது மக்க விழிபிதுங்க வைத்துள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!