Tamilnadu
#LIVE | ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
ராதாபுரம் : மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை!
மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.
வாக்கு எண்ணிக்கைக்கு தடைகோரிய அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரையின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.
தபால் வாக்கு எண்ணிக்கை முடிந்தது!
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : ராதாபுரம் தேர்தலில் பதிவான 1,508 தபால் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்தது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : வாக்கு எண்ணிக்கை சுமார் 4 மணி நேரம் நடைபெறும் எனத் தகவல்.
தி.மு.க வேட்பாளர் அப்பாவு சார்பாக வாக்கு எண்ணும் மையத்தில் முகவராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளார்.
மறு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்!
ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
சற்று நேரத்தில் உயர்நீதிமன்ற வளாகத்தில் மறு வாக்குப்பதிவு தொடங்க இருக்கிறது.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு அதிகாரியாக சாய் சரவணன் நியமனம்.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தி.மு.க வேட்பாளர் அப்பாவு வருகை
இன்று காலை 11.30 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்!
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை : தபால் ஓட்டுப் பெட்டிகள் மற்றும் 34 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கைக்காக தபால் ஓட்டு பெட்டிகள் உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டன.
ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ., இன்பதுரை வெற்றி எதிர்த்து தி.மு.க வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலின் போது, நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை 69,590 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க வேட்பாளர் அப்பாவு 69,541 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இன்பதுரை தி.மு.க. வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ., இன்பதுரையின் வெற்றியை எதிர்த்து அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளில் 203 தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் எண்ணாமல் நிராகரித்து விட்டதாகவும், அந்த வாக்குகளை எண்ண தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தன் மனுவில் கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளை மறு எண்ணிக்கைக்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
அதில், மறு எண்ணிக்கையின் போது செய்யும் வகையில் அந்த தொகுதியின் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளையும், தபால் வாக்குகளையும் வரும் அக்டோபர் 4ம் தேதி உயர்நீதிமன்ற தலைமைப்பதிவாளரிடம் ஒப்படைக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை இன்று தொடங்குகிறது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!