Tamilnadu
அதிகாரிகள் துணையின்றி நீட் தேர்வு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பில்லை - சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக மருத்துவ கல்லூரிகளில் நிரப்பப்படாமல் உள்ள 207 மேனேஜ்மெண்ட் கோட்டா இடங்களை முறையான கலந்தாய்வு மூலம் நிரப்பக்கோரி கோவையை சேர்ந்த தீரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாட்டு மாணவர்களுக்கான ஒதுக்கீடு, அகில இந்திய மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களை மதிப்பெண்களுடன் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் நீதிபதி கிருபாகரன், வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எத்தனை மாணவர்கள் ஆள்மாறாட்டதில் ஈடுப்பட்டுள்ளனர், எவ்வளவு பணம் செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த ஆள்மாறாட்டத்தில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் யார் யார் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகள் துணையில்லாமல் ஆள்மாறாட்டம் நடந்து இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக சிபிசிஐடி அக்டோபர் 15ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்