Tamilnadu
பயிற்சி பெறச் செல்வதற்கு பணம் இல்லாமல் தவித்த வீரர்கள்... நிதி உதவி அளித்த உதயநிதி ஸ்டாலின்!
பயிற்சி பயணச் செலவுக்கு பணம் இல்லாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
தாய்லாந்தில் நடைபெற உள்ள தேசிய வீல் சேர் கூடைப்பந்தாட்ட போட்டிக்காக இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ், அருள் அகஸ்டஸ் மற்றும் ஜெகன்நாத் ஆகியோர்கள் தேர்வாகியுள்ளனர்.
மேலும் போட்டிக்குத் தேர்வான மூன்று பேரும் பஞ்சாப் மாநிலத்தில் பயிற்சி பெற உள்ளனர். வறுமையின் காரணமாகவும் பணப்பற்றாக்குறை காரணமாகவும் தேர்வான மூன்று பேரும் பயிற்சிக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதனை அறிந்த தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேசிய வீல் சேர் கூடைப்பந்தாட்ட போட்டிகளில் தேர்ச்சி பெற்ற ரமேஷ், அருள் அகஸ்டஸ் மற்றும் ஜெகன்நாதன் ஆகியோர் பஞ்சாப் சென்று பயிற்சி மேற்கொள்வதற்கான பயணச் செலவுக்காக நிதி உதவி வழங்கினார்.
பயணத்துக்கான நிதியை ஹெட் வே பவுண்டேஷன் சார்பில் ராகவி செந்தில் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது ஹெட் வே பவுண்டேஷனை சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர் நவீந்தரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!