Tamilnadu
ரூ.80-ஐ எட்டும் பெட்ரோல், டீசல் விலை; கலக்கத்தில் வாகன ஓட்டிகள்!
சர்வதேச கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தையும் எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இன்றும் சென்னையில் 22வது நாளாக பெட்ரோல் டீசலின் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.77.50 ஆகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து ரூ.71.30 ஆகவும் விற்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் ஏழை எளிய மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
முன்னதாக, மோடி அரசு கடந்த 2014ம் ஆண்டு முதல் கச்சா எண்ணெயை குறைந்த விலைக்கு வாங்கிவிட்டு, இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை அநியாயத்துக்கு உயர்த்தி விற்பனை செய்து வருகிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அண்மையில் குற்றஞ்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே உள்ள பொருளாதார நெருக்கடியில், இப்படி நாளுக்கு நாள் மக்கள் மீது வரி, விலை உயர்வு என அனைத்து சுமைகளையும் மோடி அரசு ஏற்றிவிட்டு கார்ப்பரேட்டுகளுக்கான வரியில் மட்டும் சலுகைக் காட்டி வருவதை நாட்டு மக்களுக்கு இழைக்கும் பச்சை துரோகமாக கருதப்படுகிறது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
Also Read
-
ரூ.30.27 கோடி செலவில் 17 புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“பெண்களின் சமூக வாழ்வை உயர்த்தும் திராவிட மாடல்!” : அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!
-
”கனமழை - தயார் நிலையில் இருக்க வேண்டும்” : மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
86,150 மாணவர்களுக்கும்,8615 ஆசிரியர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் அன்பில் மகேஸ்
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !