Tamilnadu
“வெற்று வாய்ச்சவடால் விடுகிறதா தி.மு.க?” - எடப்பாடி பழனிசாமி கேள்விக்கான பதில் இதோ..!
சேலம் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதியில் இன்று (செப்., 28) நடைபெற்ற அரசு நிகழ்ச்சியொன்றில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அ.தி.மு.க அரசு. நீர் மேலாண்மைக்கு இந்த அரசு முன்னுரிமை கொடுக்கிறது என்பதை நிருபித்துக் காட்டியிருக்கிறோம். தி.மு.க ஆட்சியில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன? எந்த தடுப்பணைகளையும் கட்டாமல் தி.மு.க வாய்ச்சவடால் விடுகிறது.” என வாய்க்கு வந்தபடி பேசியிருக்கிறார்.
முன்பும் பலமுறை, காங்கிரஸ் ஆட்சியில்தான் பெரும்பாலான அணைகள் கட்டப்பட்டதாகவும், தி.மு.க ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை என்பதுபோலவும் தவறான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்போதே, பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஆதனூர் சோழன், தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட அணைகளைப் பட்டியலிட்டார்.
ஆனால், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி போன்ற அரைகுறை ஆட்சியாளர்களும், அரசியல் வரலாறும், தமிழக நீர் மேலாண்மையின் வரலாறும் அறியாதவர்கள் பிதற்றித் திரிகிறார்கள். இப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறியாமை நிறைந்த கேள்விக்கான பதிலைப் பார்க்கலாம்.
“1967 முதல் 1969ல் அண்ணா மறைவு வரை கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். அந்த காலகட்டத்திலும், முதல்வரான பின்னர் அவருடைய அமைச்சரவையில் சாதிக் பாட்சா, ப.உ.சண்முகம், செ.மாதவன் ஆகியோர் பொதுப்பணித்துறை அமைச்சர்களாக பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.
1976ல் தி.மு.க ஆட்சி கலைக்கப்படும் வரை தி.மு.க அரசு கட்டிய அணைகள் இருபது.
அவை: 1.தும்பலஹள்ளி அணை, 2.சின்னாறு அணை, 3.குண்டேரிப்பள்ளம் அணை, 4.வறட்டுப்பள்ளம் அணை, 5.பாலறு பொருந்தலாறு அணை, 6.வரதமாநதி அணை, 7.வட்டமலைக்கரை ஓடை அணை, 8.பரப்பலாறு அணை, 9.பொன்னியாறு அணை, 10.மருதாநதி அணை, 11.பிளவுக்கல் (பெரியாறு) அணை, 13.கடானா அணை, 14.இராமாநதி அணை, 15.கருப்பாநதி அணை, 16.சித்தாறு-1 அணை, 17.சித்தாறு-2 அணை, 18.மேல் நீராறு அணை, 19.கீழ் நீராறு அணை, 20.பெருவாரிப்பள்ளம் அணை.
இந்த அணைகள் தவிர, 1989ம் ஆண்டு மீண்டும் தி.மு.க ஆட்சி அமைந்தபோது பொதுப்பணித்துறை அமைச்சராக தற்போதைய தி.மு.க பொருளாளர் துரைமுருகன் பொறுப்பேற்றார். அதன்பிறகு, 1996 முதல் 2001 வரையிலும், 2006 முதல் 2011 வரையிலும் கலைஞர் தலைமையில் தி.மு.க அரசு அமைந்தபோதெல்லாம் துரைமுருகனே பொதுப்பணித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.
துரைமுருகனின் பொறுப்புக் காலத்தில் கலைஞரின் ஆணைப்படி கட்டி முடிக்கப்பட்ட அணைகள் 22.
அவை: 1.மோர்தானா அணை, 2.இராஜாதோப்பு அணை, 3. ஆண்டியப்பனூர் ஓடை அணை, 4.குப்பநத்தம் அணை, 4.குப்பநத்தம் அணை, 5.மிருகண்டா நதி அணை, 6.செண்பகத்தோப்பு அணை, 7.புத்தன் அணை, 8.மாம்பழத்துறையார் அணை, 9.பொய்கை அணை, 10.நல்லாறு அணை, 11.வடக்கு பச்சையாறு அணை, 12.கொடுமுடி அணை, 13.அடவிநயினார் அணை, 14.சாஸ்தாகோவில் அணை, 15.இருக்கன்குடி அணை, 16.சென்னம்பட்டி அணை, 17.கிருதமால் அணை, 18.நல்லதங்காள் ஓடை அணை, 19.நங்காஞ்சியார் அணை, 20.வரட்டாறு வள்ளி மதுரை அணை, 21.பச்சைமலை அணை, 22.ஆனைவிழுந்தான் ஓடை அணை.”
ஆக, மொத்தத்தில் தி.மு.க ஆட்சியில் கட்டப்பட்ட மொத்த அணைகள் 42. இவைதவிர பாசன வசதிகளுக்காக ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் அறியாமல் தி.மு.க ஆட்சியில் அணைகளே கட்டப்படவில்லை என முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!