Tamilnadu
தத்தளிக்கும் நிறுவனங்களில் முதலீடு - மத்திய அரசின் தவறை ஈடுகட்ட எல்.ஐ.சி-யை சூறையாடும் பா.ஜ.க!
இந்திய மக்களின் வாழ்நாள் பாதுகாப்புக்கும், வளர்ச்சித் திட்டங்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் எல்.ஐ.சி நிறுவனத்திடம் இருந்து பல லட்சம் கோடி ரூபாய்களை முதலீடு என்ற பெயரில் மோடி அரசு வங்கியுள்ளது.
நீண்ட காலமாகவே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான முதலீட்டை எல்.ஐ.சியிடம் இருந்து நிறுவனம்தான் வழங்கி வருகிறது. கடந்த 2013-14ம் நிதியாண்டு வரை, சுமார் 11 லட்சத்து 90 ஆயிரம்கோடி ரூபாயை நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களில் எல்.ஐ.சி முதலீடு செய்துள்ளது.
தற்போது மோடி அரசு பாலிசி தாரர்களைப் பற்றி துளியும் கவலைப்படாமல் திவாலன நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய எல்.ஐ.சி-யை நிர்ப்பந்திக்கிறது.
அதேபோல பல பொதுத்துறை நிறுவனங்களில், எல்.ஐ.சி நிறுவனத்தை 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய வைத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. அதன் தொடர்சியாக எல்.ஐ.சி-யிடமிருந்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 57 ஆயிரம் கோடி ரூபாயை பொதுத்துறை நிறுவனங்கள் மீது முதலீடு செய்ய வைத்துள்ளது மத்திய அரசு.
இதனால் வாராக் கடன்களால் நஷ்ட்டத்தை சந்தித்து வரும் வங்கிகளில், முதலீடு செய்வதால் எல்.ஐ.சி நிறுவனத்துக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்பது நிதர்சனமான உண்மை. இது பாலிசி தாரர்களின் பணம் என்பதைக் கூட உணராமல், தவறான பொருளாதார கொள்கையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக இதை செய்துள்ளது மோடி அரசு.
அதுமட்டுமின்றி, கடந்த 1956-ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை எல்.ஐ.சி முதலீடு செய்த தொகை ரூ.11 லட்சத்து 90 ஆயிரம் என்றால், கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியில் மட்டும் ரூ. 10 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயை எல்.ஐ.சி-யிடமிருந்து முதலீடு என்ற பெயரில் பெறப்பட்டுள்ளது.
இதன் மூலம் மோடி அரசு எல்.ஐ.சி-யை தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான கருவியாக பயன்படுத்திக் கொள்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!