Tamilnadu
பெட்ரோல், டீசல் விலை 4வது நாளாக அதிகரிப்பு; கண்டுகொள்ளாத அரசு; சிரமத்தில் வாகன ஓட்டிகள்!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4வது நாளாக அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய்யின் விலைக்கு ஏற்ப நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் இன்றைய நிலவரப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ஆறு காசுகள் உயர்ந்து ரூ.74.82 காசுகளாக உள்ளது. அதேபோல், டீசல் விலையும் லிட்டருக்கு ஏழு காசுகள் உயர்ந்து ரூ.69.13 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் அதிகரித்து வருவதால் சாமானியர்களான தங்களுக்கு சுமையாக இருக்கிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், விலை உயர்வை கண்டுக்கொள்ளாத மத்திய, மாநில அரசுகளால் பெரும் சிரமத்துக்கு ஆளாவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!