Tamilnadu
பொங்கல் விடுமுறை முடிந்து ரயிலில் சென்னை திரும்புவோர் எப்போது புக் செய்யலாம்?
பணி நிமித்தமாக சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் வசித்து வரும் மக்கள் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது.
ஜனவரி 10ம் தேதி ஊருக்கு செல்பவர்களுக்கான இன்று முன்பதிவு தொடங்கியது. ஆனால் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே தென் மாவட்டங்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
இதனால் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக பிரயத்தனப்பட்ட மக்கள், டிக்கெட் பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஆண்டுதோறும் இது போன்று டிக்கெட் முன்பதிவு செய்வதில் பிரச்னை எழுந்து வருவதால் பண்டிகை காலங்களில் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு சட்டென முடிந்தால் எதிர்வரும் நாட்களில் முன்பதிவு செய்வதில் மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, எத்தனை பேர் ஊருக்கு செல்கிறார்கள் என்பதை முன்பே திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
ஜனவரி 11ம் தேதி ஊருக்கு செல்வோருக்கான முன்பதிவு செப்டம்பர் 13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்.,14ம் தேதியும், ஜன.,13ம் தேதிக்கான முன்பதிவு செப்.,15ம் தேதியும், ஜன.,14ம் தேதிக்கான முன்பதிவு செப்.,16ம் தேதியும் சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம்.
அதேபோல், சொந்த ஊரில் இருந்து மீண்டும் ஊர் திரும்புவோருக்கான முன்பதிவு தேதி விவரங்கள் :
ஜனவரி 19ல் ஊரிலிருந்து சென்னைக்கு திரும்புவோர் செப்.,21ம் தேதியும், ஜன.,20ம் தேதி ஊரிலிருந்து கிளம்புவோர் செப்., 22ம் தேதியும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!