Tamilnadu
பள்ளிக்கூடத்தில் நடந்த ‘அந்த’சம்பவம்: ஆசிரியருக்கு தர்ம அடி- பொதுமக்கள் ஆவேசம்!
நாமக்கல் மாவட்டம் எஸ்.உடுப்பத்தி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஒன்று உள்ளது. அந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் என்பவர் கடந்த நான்கு ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். அவருக்கும் அதேப்பள்ளியில் அங்கன்வாடி மையத்தின் பொறுப்பாளருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஆசிரியர் சரவணனும், அங்கன்வாடி மைய பொறுப்பாளரும் பள்ளி வளாகத்தில் தகாத உறவில் ஈடுப்பட்டுள்ளனர். இதனைப்பார்த்த சில மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊர்மக்களுடன் சேர்ந்து புகார் அளித்தனர்.
தலைமை ஆசிரியரும் புகாரை பெற்றுக்கொண்டு இருவரையும் எச்சரித்துள்ளனர். ஆனால் மீண்டும் ஆசிரியரும் அந்த பெண்ணும் பள்ளி வளாகத்தில் தகாத முறையில் நடத்துக்கொண்டுள்ளனர்.
இந்த செய்து அறிந்த பெற்றோர் ஆத்திரத்தில் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு பள்ளி வகுப்பறையில் இருந்த ஆசிரியர் சரவணனை சரமாரியாக அடித்து உதைத்தனர். அதேப்பள்ளியில் இருக்கும் சக ஆசிரியர்களும் சரவணன் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனிடையே தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் சரவணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்களின் புகாரை அடுத்து ஆசிரியர் மீதும் அங்கன்வாடி மைய பொறுப்பாளரும் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலிஸாரும், கல்வித்துறை அதிகாரிகளும் உறுதியளித்தனர். பின்னர் போலிஸார் சரவணனை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
மாணவர்களுக்கு கல்வி கற்கும் வயதில் ஒழுக்கத்தைக் கற்றுத்தர வேண்டிய ஆசிரியர் ஒருவர் இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!