Tamilnadu

மாணவிகளிடம் தவறாக நடத்துக்கொண்ட தலைமை ஆசிரியர் : பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது!

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் கிராமத்தை அடுத்த பத்ரவள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூரில் அரசினர் உயர்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு பாடம் நடத்த 7 ஆசிரியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் பள்ளிக்கு வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை தருவதாக மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து ஒரு மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆனால் புகாரின் மீது போலிஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும் கிராம மக்களும் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து வந்த ஏரியூர் போலிஸார் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றம் சாட்டப்படும் தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்த பின்னரே பெற்றோர்கள் கலைந்தனர்.

பின்னர், தலைமை ஆசிரியரைக் கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் விரைந்து வந்த ஏரியூர் போலீசார் தலைமையாசிரியரை மீட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துவதாக வாக்குறுதி கொடுத்துள்ளனர்.