Tamilnadu
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு வருகிறது புவிசார் குறியீடு - தமிழகத்திற்கு கூடுதல் சிறப்பு என்ன?
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்தன்மையுடன் பாரம்பரியமாகத் விளைவிக்க அல்லது தயாரிக்கப்படும் உணவு வகைகளுக்கு அதன் தரத்தைப் பாதுகாக்கும் விதமாக வழங்கப்படும் சான்று. இந்த புவிசார் குறியீடு பெரும் பொருள், ஒரு மாநிலத்தின் தனித்துவம் பெற்ற சிறப்புமிக்கதாக இருக்கும்.
இதே போன்ற தனித்துவம் பெற்றக் காரணிகளின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும், மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், பூட்டுத் தயாரிக்கும் தொழிலாளர்களும், சேலை நெய்யும் நெசவாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதனையடுத்து தற்போது பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, அப்பகுதியில் பெரும் குடிசைத் தொழிலாக உள்ளது. ஆரம்பத்தில் பால்கோவா மட்டும் தயாரித்து வந்த குடிசைத் தொழிலாளர்கள் பால் அல்வா, பால் பேடா, பால் கேக், கேரட் பால்கோவா மற்றும் பியூர் கோவா என பல வகை சுவைகளில் தயாரிக்க தொடங்கி பெரும் வரவேற்பை பெற்றன.
சுமார் 1940 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் தனித்துவத்துடன் தயாரிக்கப்படும் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கேட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து புவிசார் குறியீடு விரைவில் அளிக்கப்படும் என புவிசார் குறியீட்டுத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தயாரிக்கக் கூடிய 31 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்துள்ள நிலையில் 32-வது பொருளாக ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட இருக்கிறது.
இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு சர்வதேச அளவில் தனி அங்கீகாரம் கிடைக்கும். அதிக புவிசார் குறியீடுகள் பெற்ற எண்ணிக்கையில் தமிழகம் மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது. கர்நாடகா முதல் இடத்திலும், மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவி சார் குறியீடு கொடுக்கப்பட்டால், தமிழகம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?