Tamilnadu
ஜிஎஸ்டி-யால் திருப்பூரில் நூற்றுக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் மூடல்: வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்!
மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட ஜி.எஸ்.டி வரி விதிப்பால் நாடு முழுவதும் உள்ள ஏராளமான சிறு, குறு தொழில்கள் நஷ்டமடைந்து கடுமையான நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால் மாற்றுத் தொழிலுக்குச் செல்ல முடியாமல் தொழிலாளர்களும் சிக்கித் தவித்து வருகின்றனர்.
பின்னலாடை ஏற்றுமதிக்குப் பெயர் போனது திருப்பூர் மாவட்டம். இங்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. பின்னலாடை ஏற்றுமதி மட்டுமல்லாமல், பின்னலாடைக்குத் தேவையான பிரின்டிங், வாஷிங், எம்ப்ராய்ட்ரி, அயர்னிங், பேக்கிங் செய்யும் தொழில்கள் என பல சிறு, குறு வணிகர்கள் அதனை நம்பியே தங்களது வாழ்வை கடத்தி வருகின்றனர்.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் ஜவுளித்துறையில் பின்னலாடை தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பருத்தி போன்ற மூலப் பொருட்களின் விலை உயர்ந்ததால் உற்பத்திக்குத் தேவையானவற்றை வாங்குவதிலும் உற்பத்தியாளர்கள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடைகள் ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனா போன்ற நாடுகள் குறைந்த விலையில் பின்னலாடைகளை வரியில்லா ஒப்பந்தம் மூலம் செய்து வருவதாலும் திருப்பூர் பின்னலாடை தொழிலுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல், பின்னலாடை ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மத்திய அரசு முற்றிலும் நிறுத்தியதால் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் முடங்கிப் போயுள்ளனர். மேலும், 100க்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்து செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!