Tamilnadu

நண்பரைக் கொலை செய்ய திட்டம் போட்ட பிக்பாஸ் மீரா மிதுன் : வழக்குப்பதிவு - விரைவில் கைது ?

6 அழகிப் பட்டங்களை வென்றதாக சொல்லிக்கொள்ளும் மாடல் அழகி மீரா மிதுன், மிஸ் தமிழ்நாடு திவா என்ற அழகிப் போட்டி ஒன்றை நடத்த முயன்றார். இதில் முறைகேடு செய்ததாக வந்த புகாரை அடுத்து அவரது அழகிப் பட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதனையடுத்து, பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவரால் மிஸ் தமிழ்நாடு திவா போட்டியை நடத்த முடியவில்லை. முன்னதாக, மாடலிங் துறையில் தொழிலதிபராகவுள்ள கொச்சியைச் சேர்ந்த ஜோ மைக்கேல் பிரவீன் என்பவருக்கும், மீரா மிதுனுக்கும் இடையே ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

2017 முதல் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், மிஸ் தமிழ்நாடு திவா போட்டி நடைபெறாமல் போனதற்கு மைக்கேல் பிரவீன்தான் காரணம் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீரா மிதுன் புகார் அளித்திருந்தார்.

அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மீரா மிதுன், அங்கு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியதால் அதிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில், பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது இணையதள சேனல்களுக்கு பேட்டியளித்த மைக்கேல், மீராவை வெளியேற வைப்பேன் எனப் பேசியிருந்தார்.

பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா, தனது நண்பருடன் போனில் ஆவேசமாக மைக்கேல் குறித்து பேசியுள்ளார். அப்போது, மைக்கேலை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டியது தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியானது.

இந்நிலையில், மீரா மிதுன் தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜோ மைக்கேல் பிரவீன் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மீரா மிதுன் மீது கொலை மிரட்டல், ஆபாசமாகப் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.