Tamilnadu
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: விசாரணை ஆணையத்தின் நிலை என்ன? தமிழக அரசிடம் பதில் கேட்கும் நீதிமன்றம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றம் நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது மாநில அரசு. இதனால் 13 பேர் பலியாகினர் என ஆவேசமாக வாதாடிய அவர், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீஷன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து நாளை அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனையடுத்து வேதாந்தாவின் வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!