Tamilnadu
குப்பையில் கொட்டப்பட்ட 3000 கிலோ காலாவதியான நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் : அதிர்ச்சியடைந்த போலிஸார்
தமிழகத்தில் காலாவதியான உணவுப் பொருட்களைக் கடைகளில் விற்பனை செய்து வருவதால் உணவுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னையை அடுத்த அம்பத்தூர் நொளம்பூரில் உள்ள குப்பைக் கிடங்கில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது 3 டன் எடையுள்ள நொறுக்குத்தீனி பாக்கெட்டுகள் கொட்டப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து நொளம்பூர் போலிஸார் குப்பைக்கிடங்கில் சோதனையிட்டதில் கொட்டப்பட்ட நொறுக்குத்தீனி பாக்கெட்டுகள் அனைத்தும் காலாவதியானவை என்று தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காலாவதியான நொறுக்குத்தீனி பாக்கெட்டுகளில் உள்ள தேதிகளை சமூக விரோதிகள் சிலர் அழித்து மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது என்பதற்காக அங்கேயே அதனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இப்போதைய காலகட்டத்தில், உண்பதற்குச் சுவையாக இருக்கும் என்பதால் சந்தையில் வரும் இதுபோன்ற நொறுக்குத்தீனிகளை (Junk Food) குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் விரும்பிச் சாப்பிட்டு வருகின்றனர்.
மேலும், இந்த நொறுக்குத்தீனிகள் உடலுக்கு எந்த நன்மையையும் விளைவிக்காது என்பதை அறிந்தே எடுத்துக்கொள்கின்றனர். அதிலும், காலாவதியானதா இல்லையா என்பதை கூட அறிய முற்படாமல் நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதால் உடல் பருமன், அஜீரணக் கோளாறுகள், கொழுப்பு அதிகரிப்பு போன்ற உபாதைகளையும் சந்திக்கின்றனர்.
ஆகையால், குழந்தைகளோ பெரியவர்களோ எந்தத் தரப்பினராக இருந்தாலும், நொறுக்குத்தீனிகளுக்கு அடிமையாகி விடக்கூடாது என போலிஸாரும், மருத்துவர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!