Tamilnadu
“சிலை கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த புதுச்சேரி பெண்”- சென்னை விமான நிலையத்தில் கைது!
தமிழகத்தில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தல் விவகாரம் குறித்து விசாரணை செய்ய பொன்.மாணிக்கவேல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நியமனத்தின் படி தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறார். பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனைகளை நடத்தியும் வருகிறார். தமிழகத்தின் முக்கிய புள்ளிகள் இதில் சம்பந்தப்பட்டுள்ளதும் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த புதுச்சேரியை சேர்ந்த மரிய தெரசா வனினா ஆனந்தி என்கிற பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பெண் சென்னை விமான நிலையத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையின்போது மரிய தெரசா வனினா ஆனந்தி வீட்டில் இருந்து 11 புராதன சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து திருட்டுத்தனமாக பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி ஓடிய மரிய தெரசா வனினா ஆனந்திக்கு சென்னை உயர்நீதி மன்றமும், டெல்லி உச்சநீதிமன்றமும் ஜாமீன் தர மறுத்தது. மேலும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உள்துறை அமைச்சகம் மரிய தெரசா வனினா ஆனந்திக்கு எதிராக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது
இதனிடையே, பிரான்ஸில் இருந்து துபாய் வழியாக நேற்று சென்னை வந்த மரிய தெரசாவை போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவர் போலீசாரால் தேடப்பட்டு வருவதை அறிந்து உடனடியாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
உடனே சென்னை விமான நிலையம் வந்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மரிய தெரசாவை கைது செய்தனர். அவரிடம் இன்று சிலை கடத்தல் பிரிவு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?