Tamilnadu
சொந்த செலவில் சி.சி.டி.வி கேமரா : அரசை நம்பாமல் தங்களது கிராமத்தை பாதுகாக்க களமிறங்கிய இளைஞர்கள் !
தருமபுரி மாவட்டம் பெண்ணகரம் அருகே 200 குடும்பங்கள் வசிக்கும் கிராமம் ஒன்றில் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிப்பதுடன், சிறப்பான அடிப்படை வசதிகளையும் இளைஞர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள சி.புதூர், சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் கிராமம். இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் அடிக்கடி கொள்ளை, நகைப் பறிப்பு, ஆடு, மாடுகள் திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வந்துள்ளன. காவல் நிலையத்தில் புகார் அளித்தும், குற்றச் செயல்கள் தொடர்ந்துள்ளன.
இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கிராம இளைஞர்கள் ஒன்று கூடி, ‘ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அக்னி சிறகுகள்’ எனும் பெயரில் நற்பணி மன்றத்தை தொடங்கி, பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கிராமத்தைச் சுற்றிலும், முக்கிய வீதிகளிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை அமைத்தனர்.
ஊரில் சந்தேகப்படும்படி யாராவது சென்றால், சிசிடிவி-யை கண்காணிக்கும் இளைஞர்கள் சென்று, விசாரித்துத் தான் அனுப்புகிறார்கள். இதனால், அந்த கிராமத்தில் தற்போது குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுபோல் மரக்கன்று நடுதல், பள்ளியில் நூலகம் அமைத்தல், குடிநீர் வசதி ஏற்படுத்தித் தருதல், குப்பைத்தொட்டிகள் அமைத்தல், கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ஒலிபெருக்கி அமைத்து செய்திகள், பாடல்களை ஒலிபரப்பு செய்தல் எனப் பல பணிகளையும் செய்கின்றனர்.
இதுபோன்ற பணிகளுக்காக கடந்த 2017ம் ஆண்டு நேரு யுவகேந்திராவின் முன்மாதிரி கிராமத்துக்கான பரிசையும் வென்றுள்ளது சி.புதூர் கிராமம். இளைஞர்களின் ஆற்றலை வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சி.புதூர் கிராமத்தை பலரும் வியந்து நோக்குகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?