Tamilnadu
'இந்தியில யாரு கூட பேசற' : சண்டை போட்ட மனைவி - திருமணம் ஆன ஒரே மாதத்தில் தற்கொலை செய்துகொண்ட ராணுவ வீரர்
வேலூரில் திருமணம் ஆன ஒரு மாதத்திற்குள்ளேயே இந்திய ராணுவ வீரர் ஒருவர் மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் கணியம்பாடியை அடுத்த என்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த மகேஷ் என்ற ராணுவ வீரர் தனது திருமணத்திற்காக ஒருமாத விடுமுறையில் வேலூருக்கு வந்துள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் புவனேஸ்வரியை கடந்த மாதம் 12ம் தேதி மணமுடித்தார். திருமணம் நடந்த ஒரு வாரத்திலேயே அவரது தந்தை உயிரிழந்ததால் மேலும் ஒருமாத விடுமுறையை நீட்டித்துள்ளார்.
இந்நிலையில் சத்துவாச்சேரி பகுதியில் உள்ள மேம்பாலம் வழியாக பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் புவனேஸ்வரியும், மகேஷும் வந்துக் கொண்டிருந்த போது, அப்போது இருவருக்கும் இடையேயான வாய்த்தகராறு முற்றியதால் மேம்பாலத்தில் இறங்கி பேசிக்கொண்டிருக்கையில் திடீரென மகேஷ் கீழே குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இதில் படுகாயமடைந்த மகேஷ், இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு மகேஷின் உடலை அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து அவரது மனைவி புவனேஸ்வரியிடம் விசாரணை மேற்கொள்ளபட்டதில், திருமணத்திற்காக விடுமுறையில் ஊருக்கு வந்த மகேஷ் ராணுவத்தில் பணியாற்றும் நண்பர்களுடன் இந்தியில் அடிக்கடி செல்போனில் பேசியிருக்கிறார்.
இதனை அறிந்திராத புவனேஸ்வரி, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்று சந்தேகித்து கேள்வி கேட்டுள்ளார் இதனால், இருவரிடையே சண்டை மூண்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை சத்துவாச்சேரி மேம்பாலம் அருகே பைக்கில் சென்றுபோது, வாய்ப்பேச்சு முற்றிப்போனதால் சித்ரவதையை அனுபவிப்பதற்கு பதில் சாவதே மேல் என மகேஷ் தெரிவித்ததாகவும், அதற்கு நானே சாகிறேன் என மேம்பாலத்தின் மீது ஏறுவதற்கு எத்தனிக்கும் போது என்னை தடுத்துவிட்டு மகேஷ் குதித்துவிட்டார் என புவனேஸ்வரி போலீசாரிடம் கூறியிருக்கிறார்.
இருப்பினும், மகேஷின் தற்கொலையில் மர்மம் இருப்பதாக எண்ணி போலீசார் புவனேஸ்வரியிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆன ஒரே மாதத்தில் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!