Tamilnadu
மதவெறியும், மக்கள் விரோதமும் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் தோற்றிருக்கிறது - பாலகிருஷ்ணன்
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் மொத்தம் 4,84,980 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை விட 8,290 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றியை கைபற்றியுள்ளார். இந்த வெற்றிக்கு தி.மு.க கூட்டனி கட்சி தலைவர்கள் வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் கே.பாலகிஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “நடைபெற்ற வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தலோடு வேலூர் தொகுதிக்கும் சேர்ந்தே தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால் அ.தி.மு.க - பா.ஜ.க சதி செய்து இத்தொகுதியில் தேர்தலை ரத்து செய்து விட்டன. தனியாக தேர்தல் நடைபெற்றால் பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி தாங்கள் வெற்றி பெற்று விடலாம் என பகல் கனவு கண்டனர்.
ஆனால் வேலூர் தொகுதி வாக்காளர்கள் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் சதியை முறிடியத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளனர். பண பலம், அதிகார பலம், தேர்தல் துஷ்பிரயோகங்கள் இவற்றையெல்லாம் முறியடித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த வேலூர் நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு பாராட்டுதல்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தி.மு.க வேட்பாளர் வெற்றிக்காக உழைத்த அனைத்துக் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மதவெறி பா.ஜ.க - மக்கள் விரோத அ.தி.மு.க கூட்டணியை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்பதற்கு இந்தத் தேர்தலும் மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!