Tamilnadu
தருமபுரியில் தாய் - சேய் பரிதாப பலி : மருத்துவர்களின் அலட்சியமே காரணம்? குடும்பத்தினர் குற்றச்சாட்டு !
தருமபுரி மாவட்டம் சென்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி. இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். தனது மணைவி ஜோதியை முதல் பிரசவத்திற்குகாக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
குழந்தை கருவில் இருந்தபோது ஆரோக்கியமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ஜோதிக்கு பெண் குழந்தை இறந்தே பிறந்துள்ளது. இதனால் ஜோதியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து மீளாத நிலையில், ஜோதிக்கு நேற்று இரவு ரத்தப் போக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் சிகிச்சை பலனின்றி ஜோதியும் உயிரிழந்துள்ளார்.
தாய் மற்றும் குழந்தை இறந்ததற்கு மருத்துவமனையின் அலட்சிய போக்கே காரணம் என ஜோதியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். மேலும் இருவரின் உயிரிழப்பிற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும். முறையாக சிகிச்சை மேற்கொள்ளாத மருத்தவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!