Tamilnadu
வேலூர் லோக் சபா தேர்தல்: ஓய்ந்தது பரப்புரை... நாளை வாக்குப்பதிவு... 6,000 காவலர்கள் குவிப்பு...
வேலூர் மக்களவைத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது. வருகிற 9ம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது.
இதனையொட்டி, அரசியல் கட்சியினர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரைகள் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டு மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர். தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டு கட்டமாக பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்குப்பதிவுகள் முடிவடையும் வரை செய்தி சேனல்கள், சமூக ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
வாக்குப்பதிவின் போது வேலூர் தொகுதி முழுவதும் 4 ஆயிரம் காவலர்கள், 1,600 மத்திய ஆயுதப்படை காவலர்கள், 400 ஊர்க்காவல் படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!