Tamilnadu
தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறை தீர்க்கப்படும் : வேலூர் பரப்புரையின் போது மு.க.ஸ்டாலின் உறுதி!
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று காலை வேலூரில் பல இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். வேலூர் ராமநாயக்கன் பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்குள்ள மரத்தடியிலும், வீடுகளின் திண்ணைகளிலும் உட்கார்ந்து மு.க.ஸ்டாலின் கிராம மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது பேசிய பெண் ஒருவர், ‘தி.மு.க ஆட்சி வந்தவுடன்தான் எங்கள் கிராமத்துக்கு சாலை வசதி கிடைத்தது. அதற்கு முன்பு சாலை வசதி கிடையாது. ஏன் எந்த அடிப்படை வசதியும் எங்களுக்கு கிடையாது. 100 நாள் வேலைத்திட்டமும் தி.மு.க ஆட்சியின்போது தினமும் எங்களுக்கு கிடைத்தது. இந்த ஆட்சியில் 100 நாள் வேலை எங்களுக்கு சரிவர கிடைப்பதில்லை. என தெரிவித்தனர்.
அதனையடுத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது 2017 - 2018ம் ஆண்டு மாணவர்களுக்கு இன்னும் லேப்டாப் வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும். மீண்டும் தி.மு.க ஆட்சிதான் வர வேண்டும். நாங்கள் கண்டிப்பாக தி.மு.கவுக்குத்தான் ஓட்டுப்போடுவோம்’ என்றனர்.
அப்போது குறிக்கிட்டு பேசிய மு.க.ஸ்டாலின் ஏன் தி.மு.கவிற்கு ஓட்டுப் போடுவீர்கள் என்றார். உடனே தி.மு.க தான் மக்களுக்கு நல்லது செய்யும். அந்த நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர். வயதானவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி தி.மு.க-விற்கு வாக்களிக்கப்போவதாகவும் நம்பிக்கைத் தெரிவித்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!