Tamilnadu
கோவையில் இருந்து வெளிநாடு செல்ல விமான சேவையை அதிகரிக்க சொன்ன ஆ.ராசா - நடவடிக்கை எடுத்த மத்திய அமைச்சர் !
தமிழகத்தின் தொழில் நகரமாக கருதப்படும் கோயமுத்தூர் மாவட்டத்தில் இருந்து வர்த்தக பணிகளுக்காக வெளிநாட்டுக்குச் செல்ல விமான சேவைகள் குறைவாக இருப்பதாக தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசியிருந்தார்.
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது கோவையில் இருந்து துபாய், கோலாலம்பூர், பாங்காக் போன்ற முக்கிய நாடுகளுக்குச் செல்வதற்காக விமான போக்குவரத்தை அதிகரிக்கக் கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், அது தொடர்பாக மத்திய அரசு எந்த வித நடவடிக்கையும் இதுகாறும் எடுக்கவில்லை என பேசி ஜூன் 28ம் தேதி நடந்த மக்களவைக் கூட்டத்தின் போது மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியிடம் தி.மு.க எம்.பி ஆ.ராசா முறையிட்டார்.
இதனையடுத்து, கடந்த ஜூலை 22 அன்று, ஆ.ராசாவின் கோரிக்கைக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, கோவையில் இருந்து சிங்கப்பூர், சார்ஜா, இலங்கை போன்ற பகுதிகளுக்குச் செல்ல ஏர் இந்தியா, சில்க் ஏர், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாகவும், தற்போது உள்ள நடைமுறையில் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் கோவையில் இருந்து உடனடியாக தொடங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இருந்தாலும், கோவையில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்ல இந்திய விமான நிறுவனங்களின் சேவைகளை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஜூலை 10ம் தேதி நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் விமான போக்குவரத்துத் துறை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஹர்தீப் சிங் பூரி பதிலளித்துள்ளார்.
தி.மு.க. மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவின் சீரிய முயற்சியால் விரைவில் கோவையில் இருந்து மக்களும் வர்த்தகர்களும் தொழில் ஈட்ட வெளிநாடு செல்ல விமானச் சேவைகளை தொடங்கிய வழிவகை செய்யப்படும் எனவும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உறுதியளித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!