Tamilnadu

2K கிட்ஸ்கள் அறிந்திராத அண்ணாசாலை 4 வழிச்சாலை போக்குவரத்து... 10 ஆண்டுகளுக்கு பிறகு வருகிறது...

10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அண்ணாசாலையில் 4 வழிச்சாலை போக்குவரத்தும் மீண்டும் வரவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக தி.மு.க. ஆட்சியின் போது தலைவர் கலைஞரால் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவரப்பட்டது.

இதனால் சென்னை அண்ணாசாலையில் இருந்த இருவழிப்பாதை ஒருவழிப்பாதையாகவும், 4 வழிப்பாதை இருவழிப்பாதையாகவும் மாற்றப்பட்டன. சென்னையின் மிக முக்கிய பகுதிகளான தியாகராய நகர், அண்ணா நகர், பிராட்வே போன்ற பகுதிகளுக்கு மக்கள் செல்வதற்கான வழிகள் மாற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், அண்ணாசாலை பகுதியில் நடைபெற்றுவந்த மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் அண்மையில் முடிவடைந்தன. இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை அண்ணாசாலையில் 4 வழிச்சாலை போக்குவரத்து மீண்டும் கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது வருகிற ஆகஸ்ட் 3ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குறிப்பாக, முதல் முறையாக அண்ணாசாலையில் 4 வழிச்சாலை போக்குவரத்தை அனுபவிக்க இருக்கும் 2K கிட்ஸ்களுக்கு மத்தியில், 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வசதி மீண்டும் வருவதால் 80S, 90S கிட்ஸ்களுக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சி தரும் செய்தியாகவே அமைந்துள்ளது.