Tamilnadu

சிலை கடத்தல் வழக்கு கடந்துவந்த பாதை! #ADMKCriminalMinisters

சிலை கடத்தல் வழக்கு கடந்து வந்த பாதைகள் பற்றிய முழு விவரம்

✦ 21 ஜூலை, 2017

சிலைக்கடத்தல் வழக்கில் விசாரணை அதிகாரியாக ஐஜி பொன்.மாணிக்கவேலை உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் நியமித்தார்.

✦ ஜூலை, 2017

ஐஜி பொன் மாணிக்கவேலின் நியமனத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு.

✦ செப்டம்பர், 2017

தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

✦ செப்டம்பர், 2017

தமிழக அரசின் மேல்முறையீட்டால் ஐஜி பொன் மாணிக்கவேலின் விசாரணை இரண்டு மாதங்கள் தாமதமாகத் தொடங்கியது.

✦ செப்டம்பர், 2017

மேல்முறையீடு தள்ளுபடி ஆன பிறகு சிலை கடத்தல் விசாரணைக்கு என 200 காவலர்களை தமிழக அரசு ஒதுக்கியது.

✦ செப்டம்பர் 2017 - மே 2018

பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் மீட்பு - அரசு அதிகாரிகள் உட்பட பலர் கைது.

✦ ஜூன் 2018

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ரயில்வே காவல் பணி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

✦ 31 ஜூலை, 2018

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சிலை செய்ததில் மோசடியில் ஈடுபட்டதாக அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது.

✦ 1 ஆகஸ்ட், 2018

நீதிமன்றத்தால் சிலை கடத்தல் பிரிவு அமைக்கப்பட்ட ஓராண்டு ஆன போதிலும் விசாரணை அறிக்கை வழங்கவில்லை - தமிழக அரசு குற்றச்சாட்டு.

✦ 1 ஆகஸ்ட், 2018

சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு கொள்கை முடிவு.

✦ 2 ஆகஸ்ட், 2018

ஐ.ஜி பொன் மாணிக்கவேலின் செயல்பாடுகள் திருப்தி இல்லை எனக் கூறி சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை.

✦ 2 ஆகஸ்ட், 2018

சிலை கடத்தல் வழக்குகள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்.

✦ 7 ஆகஸ்ட், 2018

சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை.

✦ 11 அக்டோபர், 2018

சிலை கடத்தல் வழக்கில் தமிழக அரசு மீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.

✦ 28 ஜனவரி, 2019

தமிழக அரசு மற்றும் 66 போலீசார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கில், ஐஜி பொன் மாணிக்கவேல் நியமனத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.

✦ 12 ஏப்ரல், 2019

சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்தது.

✦ 11 ஜூன், 2019

வழக்கு விசாரணையில் அமைச்சர், டிஜிபி தலையிடுகிறார்கள் என பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் புகார்.

✦ 24 ஜூலை, 2019

சிலைக் கடத்தல் விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளதாக பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் தகவல்.