Tamilnadu
உங்கள் வீட்டில் ஏசி,கார் இருக்கிறதா? அப்போ உங்களுக்கு ரேஷன் கார்டு இல்லை - அ.தி.மு.க அரசின் புதிய உத்தரவு
ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் மானிய விலை சமையல் பொருட்களை பெறும் வகையில், அரசு பொதுவிநியோக ரேஷன் கார்ட் திட்டம் நாடு முழுவதும் அமலில் உள்ளது. மேலும் இந்த திட்டத்தில் வசதி படைத்தவர்கள் மற்றும் ஏராளமான போலி ரேஷன் அட்டையை பயன்படுத்தி அரசு மானிய பொருட்களை பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. சில விதிமுறைகளை வகுத்து இவற்றில் ஏதாவது ஒன்று இருந்தால் அவர்களுக்கு ரேஷன் கார்டு சலுகை பறிக்கப்படும். அதன்படி, கீழ்க்காணும் அம்சங்களில் ஏதேனும் ஒன்றை வைத்திருந்தாலும் ரேஷன் கார்டு சலுகை பறிக்கப்படும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது.
புதிய வரைமுறைகள் :
வருமான வரி செலுத்தும் ஒரு நபர் இருக்கும் குடும்பங்கள்.
தொழில் வரி செலுத்தும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள்.
5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயக் குடும்பங்கள்.
மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற நபர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்கள்.
நான்கு சக்கர வாகனத்தை சொந்த பயன்பாட்டிற்கு வைத்துள்ள குடும்பங்கள்.
ஏசி வைத்திருக்கும் குடும்பங்கள்.
மூன்று அல்லது அதற்கு மேலான அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடுகளைக் கொண்ட குடும்பங்கள்.
வணிக நிறுவனங்களை பதிவு செய்து வைத்துள்ள குடும்பங்கள்.
அனைத்து வகை ஆதாரங்களில் இருந்து பெறப்படும் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தைத் தாண்டி பெறும் குடும்பங்கள்.
என மேற்கூறிய குடும்பங்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் பலரின் ரேஷன் கார்டு சலுகைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?