Tamilnadu
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? - தேர்தல் தேதியை அறிவிக்க உச்ச நீதிமன்றம் கெடு
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தது.
அப்போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், அக்டோபருக்குள் வார்டு மறுவரையறைக்கான பணிகள் நிறைவு பெறும் என உறுதி அளித்தது. இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்