Tamilnadu

எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி மக்களின் பணத்தை ‘காலி’ செய்த ஆட்சியாளர்கள் : அ.தி.மு.க.,வுக்கு இது புதுசா என்ன?

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூறாவது பிறந்தநாளை நூற்றாண்டு விழாவாக தமிழக அரசு கடந்த ஆண்டு 17/01/2018 முதல் இந்த ஆண்டு 17/1/2019 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கூட்டங்கள் நடத்தியது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக தமிழக அரசு செலவிட்ட தொகை என்னவென்று கேட்டால், வாயை பிளக்க வைக்கும் அளவுக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆர்.டி.ஐ. ஆர்வலரான ஹக்கீம் என்பவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக செலவு செய்யப்பட்ட தொகையின் விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கேட்டறிந்திருக்கிறார்.

அதில், கடந்த ஒரு ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடியதற்ஙு 6 கோடியே 88 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1 கோடியே 99 லட்சத்து 86 ஆயிரத்து 639 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே தமிழ்நாடு நிதி பற்றாக்குறையால் தவித்து வருவதால் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்காமலும், மக்கள் நலத் திட்டங்களை கிடப்பில் போட்டுள்ள நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு மக்களின் வரிப்பணமான 6 கோடியே 88 லட்சத்தை வாரி இரைத்திருப்பது அநாவசியமற்றது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் எம்.ஜி.ஆரின் பெருமையை இந்த தலைமுறையினரிடம் எங்கு கொண்டு சேர்த்ததற்கு எந்த குறியும் இல்லை. அதுசரி.. ஜெயலலிதாவையே வெறும் பெயரளவுக்கு வைத்துக்கொண்டு ஆட்சி செய்யும் அ.தி.மு.க.,வுக்கு இதெல்லாம் புதுசா என்ன ?