Tamilnadu
பென்ஷன் கொடுக்க முடியலன்னா..பஸ் ஒன்னு கொடுங்க: அரசை அலறவிட்ட போக்குவரத்து துறை ஊழியர்கள் !
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் விழுப்புரம் கோட்டம் வேலூர் மண்டலத்தில் நடத்துநர்களாக பணியாற்றியவர்கள் பக்தவத்சலம் கடந்த பிப்ரவரி மாதமும், ராதாகிருஷ்ணன் கடந்த மே மாதமும் ஓய்வு பெற்றனர்.
இதில் பக்தவச்லத்திற்கு ஓய்வூதியமாக ரூ.9.74 லட்சமும், ராதாகிருஷ்ணனுக்கு 18.21 லட்சமும் வழங்க வேண்டும். பணி கொடை சட்டத்தின் அடிப்படையில் ஊழியர்கள் ஓய்வுபெற்ற நாளன்று அவர்களுக்கான பண பலன்களை வழங்க வேண்டும்.
ஆனால், தங்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பலனை இதுகாறும் வழங்காததால், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்களின் மனுவில் தங்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதியத்துக்கு 18% வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும், ஒரே தவணையில் பண பலன்களை வழங்கவில்லை என்றால், எங்களுக்கு தலா அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வழக்கு நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பார்த்திபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடர்பாக 8 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!