Tamilnadu
வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் : ரயில்வே அமைச்சரிடம் தி.மு.க எம்.பி. மனு!
சென்னை வேளச்சேரி - பரங்கிமலை இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடம் மனு அளித்துள்ளார்.
சென்னையில் 1995ம் ஆண்டு தொடங்கப்பட்ட பறக்கும் ரயில் திட்டம் 2007ம் ஆண்டு வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு வேளச்சேரி முதல் பரங்கிமலை வரை 5 கிமீ இடையேயான பறக்கும் ரயில் திட்டத்தை விரிவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
தற்போது அதற்கான சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்ட நிலையில் வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளார் தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
Also Read
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!