Tamilnadu
ஹைட்ரோகார்பன் திட்டம் கட்டாயப்படுத்தப்படாது: T.R.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்!
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரமும் அழிவை சந்திக்க நேரிடும் எனக் கூறி தமிழகம் முழுவதும் பல்வேறு வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்டா மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்றைய மக்களவைக் கூட்டத்தொடரின் கேள்விநேரத்தின் போது தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் வலுக்கட்டாயமாக தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தாது என பதிலளித்தார்.
இவ்வாறு இருக்கையில், இன்றளவும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, தமிழகத்தில் செயல்படுத்தவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் எனப் பேசியிருந்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?