Tamilnadu

இந்தியாவில் சுகாதாரமற்றக் குடிநீர் பருகியதில் 2,439 பேர் மரணம்! அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் நிலத்தடி நீர் குறித்து சமீப காலங்களில் வெளிவரும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவு வருவதால் மக்கள் தண்ணீர் தேடி அலைக்கின்றனர். கிராமப் புறங்களிலும், சில நகரங்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரை மக்கள் பயன்படுத்துகின்றனர். முறையான சுத்திகரிப்பு செய்யாமல் தண்ணீரைப் பயன்படுத்தி வருவதால் பல்வேறு வகையான தொற்றுநோய்களினால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.

இந்நிலையில் அரசு முறையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும் என மக்கள் போராட்டம் நடத்திவரும் வேலையில், இந்திய முழுவதும் சுகாதாரமற்ற மாசு அடைந்த நீரைக் குடிப்பதால் 2018ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 7 பேர் மரணம் அடைகின்றனர் என்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரப் புலனாய்வுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சகம் புள்ளி விவரங்களோடு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,”கடந்த 2018ம் ஆண்டு மட்டும், சுகாதாரமற்ற நீரைக் குடித்ததனால், பல வியாதிகள் வந்துள்ளது. குறிப்பாகக் காலரா, கடுமையான வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களினால் 2 ஆயிரத்து 439 பேர் மரணமடைந்துள்ளனர்.

மேலும் சுகாதாரமற்ற நீரைப் பருகியதனால் 6 பேரும் காலராவாளும், 1,450 பேர் வயிற்றுப்போக்காலும், 399 பேர் டைபாய்டு காய்ச்சலாலும், 584 பேர் மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துள்ளனர்.

இதில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் தான் அதிகம் உயிரிழந்துள்ளனர். இதுபோன்ற நோய்களினால் இந்திய முழுவதும் சுமார் 30 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்”. என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.