Tamilnadu

வாஜ்பாய் ஆட்சியில் முரசொலி மாறன் அதிக வேலை வாய்ப்பை உருவாக்கினார்! டி.கே.எஸ்.இளங்கோவன்

நேற்றையதினம் நடைபெற்ற மாநிலங்களைவை கூட்டத்தில் மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் "சிறப்பு பொருளாதார மண்டல திருத்த மசோதா 2019"யை மாநிலங்களவையில் தாக்கல் செய்தார்.

இதையடுத்து இதன்மீது விவாதமம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் தமிழக எம்.பி களும் கலந்துகொண்டனர். அப்போது தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் அந்த விவாவத்தில் கலந்துகொண்டார்.

அந்த விவாதத்தில் அவர் பேசுகையில்,"முந்தைய பா.ஜ.க ஆட்சியில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அப்போது தொழில்துறை அமைச்சராக தி.மு.க முன்னாள் எம்.பி முரசொலி மாறன் அங்கம் வகித்தார். அவர் சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தை க்கொண்டுவர முன்வந்தார்.

அந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் வேலையின்றி தவித்த ஏராளாமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவில் சேவை துறைகளில் மட்டும் கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் எவ்வளவு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று கேள்வி எழுகிறது.

இதனால் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க ஏற்பாடுகள் இல்லாமல் போகிறது. தமிழகத்தின் நாங்குநேரியில் கொண்டு வரப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் பயன்பாட்டுக்கு வராமலே உள்ளது. சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான பிரச்னைகள் பற்றி ஆய்வு எதையும் மேற்கொள்ளாமல் இந்த மசோதாவை கொண்டு வருவது ஏன்? இது கண்டனத்துக்கு உரியது. இந்த மசோதாவை எதிர்க்கிறோம். என அவர் இவ்வாறு பேசினார்.