Tamilnadu
வன்முறைக்கும், அராஜகத்திற்கும் பெயர்போன காவல் அதிகாரி கசூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமனம்!
பொள்ளாச்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் பெயரை வெளியிட்டது, டாஸ்மாக் போராட்டத்தில் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய விவகாரங்களில் சிக்கிய காவல் அதிகாரி பாண்டியராஜன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் அராஜக செயல்களுக்குப் பெயர்போனவர். கடந்த 2017-ம் ஆண்டு திருப்பூர் சாமளாபுரம் பகுதியில் அகற்றப்பட்ட மதுபானக்கடை ஒன்றை திறக்க இருப்பதாகத் தகவல் வெளியானதையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதுடன், கொலைவெறித் தாக்குதல் நடத்தினர். இந்த வன்முறை வெறியாட்டத்திற்குத் தலைமை தாங்கியவர் அப்போதைய திருப்பூர் மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (ஏ.டி.எஸ்.பி) பாண்டியராஜன்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தையே அதிரச்செய்த நிலையில், அப்போதைய கோவை எஸ்.பி-யான பாண்டியராஜன் பாதிக்கப்பட்டு புகார் கொடுத்த பெண் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினார்.
பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிடக்கூடாது எனும் விதிமுறையை மீறிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு இவரைக் காத்திருப்போர் பட்டியலில் வைத்தது.
இந்நிலையில், காவல்துறை அதிகாரி பாண்டியராஜன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (எஸ்.பி) பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அராஜக செயல்களுக்குப் பெயர் போன அதிகாரியை தங்கள் மாவட்ட எஸ்.பி-யாக நியமித்ததற்கு கரூர் மாவட்ட மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?