Tamilnadu
வீட்டிற்காக குடங்களைசுமக்கும் மாணவர்கள்: தண்ணீர்பிடிக்க விடுமுறை கேட்பதாக ஆசிரியர்கள் கவலை
தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள சூழலில் மாநிலம் முழுவதும் மக்கள் குடிநீருக்காக அலைந்து வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சூழலில் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். பத்து, இருபது நாட்களுக்கு ஒருமுறை, மிகக்குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகியுள்ளது.
மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது மக்களின் சிரமத்தை உணர்ந்து கொள்ளாமல் முதல்வரும், அமைச்சர்களும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமே இல்லை என்கிற அளவில் பேசி வருகின்றனர். அரசே இப்படி காட்சிப்படுத்தி வருவது மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று வெளியிட்டிருந்த பேஸ்புக் பதிவில், தமிழகத்திற்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முன்வந்ததாகவும்,
ஆனால் தமிழகத்தில் தண்ணீர் போதுமான அளவு இருக்கிறது. அதனால், எந்த உதவியும் தங்களுக்குத் தேவையில்லை என்று தமிழக அரசு மறுத்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தண்ணீர் இல்லாததால் பல மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் உள்ளனர். தண்ணீர் தேடி அலையும் அம்மாவிற்கு உதவியாக தண்ணீர் எடுக்க செல்வதால் பள்ளிக்கு வரமுடியவில்லை என ஆசிரியர்களிடம் விடுமுறை கேட்டுள்ளனர். ஆனால் அமைச்சர்கள் அரசு பள்ளிகளில் தண்ணீர் விநியோகம் சரியான முறையில் நடைபெற்றுவருகிறது என தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றை அரைநாள் மட்டும் இயக்கின்றார்.
அதேப்போல் நேற்றைய தினம் திருவண்ணாமலை அடுத்த சேரியந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதன்காரணமாக மாணவர்கள் நேற்று உணவு இடைவேளையின் போது, அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் குழாயிலிருந்து வாட்டர் பாட்டில்கள் மற்றும் குடங்களில் தண்ணீர் பிடித்து வந்தனர். இந்த அவல நிலைமை தமிழகம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?