Tamilnadu
தண்ணீர் பிரச்னையில் மக்கள்... மந்திரிகளுக்கு ஹோம் டெலிவரி! : என்னங்க சார் உங்க சட்டம்?
தண்ணீர் பஞ்சம் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. அன்றாடத் தேவைகளுக்கான குறைந்தபட்ச நீருக்காக மக்கள் போராடவேண்டிய நிலை உருவாகியுள்ளது. பொதுமக்கள் காலி குடங்களோடு தண்ணீர் லாரிகளுக்காக காத்திருக்கும் சூழல் நிலவி வருகிறது.
அடிப்படைத் தேவையான குடிநீரை மக்களுக்கு உறுதிசெய்யமுடியாத அரசாக எடப்பாடி அரசு ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. தங்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதிலும், அதை வைத்து பணம் சம்பாதிப்பதையுமே குறிக்கோளாகச் செயல்பட்டு வரும் அமைச்சர்களுக்கு மக்கள் சந்திக்கும் குடிநீர் பிரச்னைகளைப் பற்றி அக்கறை இல்லை.
நடைமுறைச் சிக்கல் புரியாமல் முதல்வரும், அமைச்சர்களும் தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடே இல்லை என்கிற ரீதியில் பேசி வருகின்றனர். பொய்யாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதாகக் கூறும் ஆட்சியாளர்களுக்கு மக்கள் காலி குடங்களுடன் சாலைகளில் நிற்பது கண்ணுக்குத் தெரியவில்லை போலும்.
டைம்ஸ் நவ் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளில் தண்ணீர் சரிவரக் கிடைக்கிறதா என ஒரு ஸ்டிங் ஆபரேஷனை நடத்தியது. அப்போது பேசிய குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் “முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் மூன்று வேளை தண்ணீர் கேட்பார்கள். கேட்கும்போதெல்லாம் நாங்கள் அனுப்பி வைப்போம். தினசரி” என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல, அமைச்சர்கள் அத்தனை பேரின் வீடுகளுக்கும் நிறைவான தண்ணீர் சப்ளை நடந்து வருகிறது. அமைச்சர்களின் குடியிருப்புக்கு தினசரி 24,000 லிட்டர் மெட்ரோ தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தினசரி இரு முறை தண்ணீர் வழங்கப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த எவ்வித பிரஞ்யையும் இன்றிப் பேசிவருகிறார்கள்.
இதுதொடர்பாக, அ.தி.மு.க-வின் ஒரே மக்களவை எம்.பி-யான ஓ.பி.ரவீந்திரநாத் குமாரிடம் டைம்ஸ் நவ் சார்பாக தொலைபேசி மூலம் கேட்கப்பட்டது. அப்போது அவர், தமிழ்நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னை பற்றியும், தன் வீட்டிற்கு சப்ளை செய்யப்படும் தண்ணீர் அளவு பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என மழுப்பியுள்ளார்.
தமிழக துணை முதல்வரின் மகனாகவும், எம்.பி-யாகவும் இருந்துகொண்டு தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறை பற்றிய கேள்வியை தவிர்க்கும் ரவீந்திரநாத் குமாரை செய்தியாளர் தொடர்ந்து கேள்வி எழுப்பியும் எவ்வித உருப்படியான பதிலையும் சொல்லாமல் இணைப்பைத் துண்டித்துள்ளார். இந்தச் செயல் மக்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?