Tamilnadu
எம்.பி கனிமொழி அறிவிப்பை அடுத்து மூடப்பட்ட ஊற்றுகளில் தண்ணீர் எடுக்க அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளத்தில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் 3 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று குடிதண்ணீர் தேடி அலைகின்றனர். தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்படி இந்த பகுதிகளுக்கு 7 நாளைக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. தற்பொழுது நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டால் குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தினமும் தண்ணீரை விலைக்கு வாங்க முடியததால் வைப்பாற்றுப் ஆற்றுப்பகுதியில் ஒருஆள் மட்ட அளவில் குழி தோண்டி ஊற்று தண்ணீரை சிறிது சிறிதாக தேங்காய் குடுவையில் பிடித்து குடங்களை நிரப்பி தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இவ்வாறாக ஒரு குடம் தண்ணீர் எடுக்க ஒரு மணி நேரமாகிறது.
அரசு முறையான குடிநீர் வசதி செய்து தராததால், ஊற்று நீரை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மக்கள் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியானது. அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் இதனால் நெருக்கடி ஏற்பட்டது. தண்ணீர் விநியோகத்தை சரி செய்யாமல், இந்த பிரச்னையை மூடி மறைப்பதாகக் கூறி, ஊற்றை மூடியது பேரூராட்சி நிர்வாகம். ”நீங்களும் தண்ணி தரமாட்டீங்க, நாங்க கஷ்ட்டப்பட்டு எடுக்குறதையும் விடமாட்றீங்களே” என மக்கள் கொதித்தெழுந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தூத்துக்குடி தொகுதி தி.மு.க மக்களவை உறுப்பினர் கனிமொழி, ஜூன் 23ம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும், பேரூராட்சி அலுவலகத்தை மக்களோடு முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தார்.
அதிர்ந்து போன அதிகாரிகள் வேறுவழியின்றி மூடப்பட்ட ஊற்றுக் குழிகளை மீண்டும் தோண்டி எடுத்து பொதுமக்கள் தண்ணீர் எடுக்க அனுமதித்துள்ளனர்.
தண்ணீர் பிரச்னைக்கு இது தீர்வாக போதும், இருக்கும் நீர் ஆதாரத்தை மக்கள் பயன்படுத்த கனிமொழி எம்.பி மேற்கொண்ட முயற்சியால் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்க சில கோரிக்கைகளை அப்பகுதி பெண்கள் முன்வைத்துள்ளனர். ” பலவருடமாக இப்படி தான் தண்ணீர் எடுக்கின்றோம். 3 கி.மீ நடந்து வந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. ஊற்றில் இருந்து தண்ணீர் பிடிக்க ஆகும் நேரத்தால், வீடுகளில் உணவு சமைப்பதற்கும் மற்ற வேலைகளும் தாமதாமாகிறது. இதனால் பேருராட்சி நிர்வாகம் வைப்பாறு பகுதியில் போர் வேல் அமைத்து, தண்ணீர் டேங்கு மூலம் நீர் விநியோகம் செய்ய வேண்டும்.” என கோரிக்கை வைத்துள்ளனர். நடவடிக்கை எடுக்குமா அரசு?
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!