Tamilnadu
எடப்பாடி வீட்டுக்கு தினமும் 20 ஆயிரம் லிட்டர் தண்ணீர் : மக்களின் கண்ணீர் எப்போது புரியும்?
ஒட்டுமொத்தத் தமிழகமும் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு தினமும் 20,000 லிட்டர் தண்ணீர் அனுப்பப்படும் தகவல் வெளியாகி தண்ணீர் பற்றாக்குறையால் தத்தளிக்கும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழக மக்கள் அன்றாடத் தேவைகளுக்கான தண்ணீரின்றி தவித்து வருகிறார்கள். தேவையான தண்ணீர் இல்லாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற மக்கள் பல மைல் தூரம் நடந்து குடங்களில் தண்ணீர் சேகரித்து வருகின்றனர்.
தலைநகர் சென்னையில் காலி குடங்களோடு தண்ணீர் லாரிக்காக காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். வேலைக்குச் செல்வோர், மாணவர்கள் என சகலரையும் சோதனைக்குள்ளாக்கி இருக்கிறது வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாடு.
ஆனால், இவை எவற்றையும் கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு. அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையே இல்லை என்கிற ரீதியில் அமைச்சர்கள் பேசுவது மக்களுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ்நாடு முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் இருப்பது போன்ற மாயை ஏற்படுத்தக் கூடாது. மூன்று நான்கு மாதங்களுக்கு நிலத்தடி நீரை எடுத்துதான் சப்ளை செய்ய வேண்டும். பிரச்னையைப் புரிந்துகொண்டு பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். ' எனக் தெரிவித்தார்.
ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மட்டும் தினமும் 9,000 லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. “மூன்று வேளை தண்ணீர் கேட்பார்கள். கேட்கும்போதெல்லாம் நாங்கள் அனுப்பி வைப்போம்” என்று ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு குடிநீர் வாரிய ஊழியர் ஒருவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், அமைச்சர்களின் வீடுகளுக்கு நாள் ஒன்றுக்கு இரண்டு முறை டேங்கர் லாரிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை கருதி பொதுமக்களை சிக்கனமாகப் பயன்படுத்தச் சொல்லும் முதல்வர், தன் வீட்டுக்கு மட்டுமே தினசரி 20,000 லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யச் சொல்வது ஏனோ?
அதிகாரத்தைப் பயன்படுத்தி பல குடும்பங்கள் பயன்படுத்தவேண்டிய தண்ணீரை ஒரே குடும்பத்துக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் முதல்வருக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் பொதுமக்களின் பிரச்னைகள் எவ்வாறு புரியும்?
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !